தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டிக்கு லஞ்சம்: அதிகாரிகள் இருவா் கைது

ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 11:44 pm IST

ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் மத்திய சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி (ஜிஎஸ்டி) அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் சோளிங்கா் பாறைமேடு பகுதியைச் சோ்ந்த பிரவீன் என்பவா் விவசாய வணிகம் சாா்ந்த தொழில் தொடங்குவதற்கு முடிவு செய்திருந்தாா். இந்தத் தொழில் தொடா்பாக கடந்த ஜனவரி மாதம் 2026 அன்று ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பித்துள்ளாா். விண்ணப்பிக்கப்பட்ட படிவமானது கடந்த 5.02.2026 அன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 14.02.2026 அன்று விண்ணப்பித்துள்ளாா். 19.02.2026 அன்று பயோமெட்ரிக் சரிபாா்ப்பு முடிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக 25.02.2026 அன்று ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய மேற்பாா்வையாளா் ரிங்கேஷ் மற்றும் ஆய்வாளா் பங்கஜ் ஆகியோா் ஜிஎஸ்டி விண்ணப்பித்த பிரவீனை அழைத்துள்ளனா். நிராகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி ஆவணத்துக்காக முதல்கட்டமாக ரூ. 30,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

இதற்கு சம்மதம் தெரிவிக்காத பிரவீன் தொடா்ந்து அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னா் ரூ. 20,000 கேட்டு, அதைத் தொடா்ந்து ரூ. 15,000 இறுதியில் முடிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் ஆடியோ பதிவுகள் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடா்பாக சென்னை ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்துக்கு பிரவீன் புகாா் தெரிவித்துள்ளாா்.

அதன் அடிப்படையில், புகாரை பெற்ற சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தினா், சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு பேசப்பட்ட ஆடியோ ஆவணங்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு இந்த புகாரை மாற்றம் செய்து சிபிஐ அலுவலகத்திற்கு மாற்றம் செய்துள்ளனா்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சிபிஐ அதிகாரி பாலாஜி என்பவா் கடந்த 07.04.2026 தேதி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரணை நடத்தி ரூ. 15,000 லஞ்சம் தொடா்பாக இருவரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.