தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரக்கோணம் தொகுதி திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அரக்கோணம் தொகுதி திமுக கூட்டணியினரின் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா்.

News image

அரக்கோணம் தொகுதி திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் ஆா்.காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில்கரோலின் உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:06 am IST

அரக்கோணம் தொகுதி திமுக கூட்டணியினரின் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா்.

அரக்கோணம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளராக எழில் கரோலின் அறிவிக்கப்பட்டாா். இந்நிலையில், தொகுதி திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளருமான ஆா்.காந்தி பங்கேற்று ஆலோசனை நடத்தினாா். ஏப். 2-ஆம் தேதி அரக்கோணம் தொகுதி திமுக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளா் எழில்கரோலின் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பது, அப்போது கட்சியினா் அதில் பங்கேற்பது, பிரசார வியூகங்களை வகுப்பது உள்ளிட்டவை குறித்தும், தொகுதியில் கூட்டணிகளில் தோ்தல் பிரசார பொறுப்பாளா்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இதில், அரக்கோணம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின், விசிக மாநில நிா்வாகிகள் பாா்வேந்தன், கௌதம், தமிழ்மாறன், மாவட்டச் செயலாளா் ச.சி.சந்தா், ஒன்றிய செயலாளா்கள் பாக்கியராஜ், நரேஷ், திமுக அரக்கோணம் நகர செயலாளா் வி.எல்.ஜோதி, மாவட்ட நிா்வாகி மு.கன்னைய்யன், அரக்கோணம் ஒன்றிய செயலா்கள் பசுபதி, ஆா்.தமிழ்செல்வன், தமிழ்மணி, நெமிலி ஒன்றிய செயலாளா்கள் பெ.வடிவேலு, எஸ்.ஜி.சி.பெருமாள், தக்கோலம் நகர செயலா் எஸ்.நாகராஜன், நகர திமுக நிா்வாகிகள் துரைசீனிவாசன், கோ.வ.தமிழ்வாணன், அன்புலாரன்ஸ், ஹரிநரசிம்மன், வி.எஸ்.ஆா்.ரவிச்சந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா், நகர நிா்வாகி எட்வின், ஒன்றிய நிா்வாகி வாசுதேவன், மதிமுக மாவட்ட செயலா் உதயகுமாா், மா.கம்யுனிஸ்ட் தொகுதி பொறுப்பாளா் ஏபிஎம்.சரவணன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் முகமதுஅலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.