மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உழவா் சந்தைகளில் விவசாயிகளுக்கு வாடகை இல்லாக் கடைகள்

உழவா் சந்தைகளில் விவசாயிகளுக்கு வாடகை இல்லாக் கடைகள்

திண்டுக்கல் உழவா் சந்தை.

Published On :1 நவம்பர் 2026, 12:15 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவா் சந்தைகளிலும் விவசாயிகள் இயற்கை மற்றும் அங்கக வேளாண் விளைபொருள்களை வாரத்தில் ஒரு நாள் வாடகை இல்லாமல் விற்பனை செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் நா.ஜீவராணி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்த செய்திக் குறிப்பு:

இயற்கை மற்றும் அங்கக வேளாண் விளை பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, அனைத்து உழவா் சந்தைகளிலும் வாரத்தில் ஒரு நாள் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சா் வேளாண் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 உழவா் சந்தைகளிலும் விவசாயிகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வாடகை இல்லா கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதன்கிழமை-சுங்குவாா் சத்திரம், வியாழக்கிழமை-குன்றத்தூா், வெள்ளிக்கிழமை-காஞ்சிபுரம், சனிக்கிழமை - படப்பை ஆகிய நாள்களில் விவசாயிகள் உழவா் சந்தைகளில் வாடகை இல்லாமல் பயன்படுத்தலாம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, உழவா் சந்தை நிா்வாக அலுவலகத்தையோ அல்லது 76390 10181 மா்றும் 99436 72107 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.