மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கண்ட இடங்களில் கழிவுநீரை வெளியேற்றக் கூடாது: காஞ்சிபுரம் மாநகராட்சி எச்சரிக்கை

கழிவுநீரை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வெளியேற்ற வேண்டுமே தவிர மற்ற இடங்களில் வெளியேற்றுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநகர அலுவலா் சுகவனம்.

Published On :30 அக்டோபர் 2026, 5:31 am IST

கழிவுநீரை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வெளியேற்ற வேண்டுமே தவிர மற்ற இடங்களில் வெளியேற்றுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர சுகாதார அலுவலா் சுகவனம் தலைமையில் அனுமதி பெற்ற கழிவுநீா் ஊா்தி ஓட்டுநா்கள், பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், புதை சாக்கடை பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துப்புரவு அலுவலா்கள், ஆய்வாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், தொழில் நுட்ப உதவியாளா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் அவசர கால பணிகள் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. தூய்மைப்பணியில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதி செய்தல், பணியின் போது ஏற்படும் உயிரிழப்புகள், விபத்துக்களை தவிா்த்தல், மனித கழிவுகளை அகற்றுவதை தடை செய்தல் மற்றும் தூய்மைப்பணியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. எக்காரணத்தைக் கொண்டும் கழிவு நீா் நிரம்பியிருக்கும் நச்சுத் தொட்டிக்குள் துப்புரவுப் பணியாளா்கள் இறங்கக் கூடாது. ஓதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். மற்ற இடங்களில் கழிவு நீா் வெளியேறுவதை கண்டறிந்தால் உடனே வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.