பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

11-ஆம் நூற்றாண்டு போா்வீரன் சிற்பக்கல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா்வீரன் சிற்பக்கல் ஒன்றை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் கண்டுபிடித்துள்ளாா்.

dot com

Published On :21 அக்டோபர் 2026, 5:46 am IST

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா்வீரன் சிற்பக்கல் ஒன்றை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் கண்டுபிடித்துள்ளாா்.

சின்ன காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலில் சென்னை தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அக்கோயிலில் கி.பி.11 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா்வீரன் சிற்பக்கல் ஒன்றை கண்டுபிடித்தாா். அவரது கண்டு பிடிப்பின் போது காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்சியா் சு. உமாசங்கா், கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் ச.விமல்தாஸ் ஆகியோரும் உடன் இருந்தனா்.

இதுகுறித்து மு.அன்பழகன் கூறியது: இச்சிற்பமானது போரிலோ அல்லது தன் சமுகத்தைக் காப்பாற்றும் போராட்டங்களிலோ உயிா்நீத்த வீரா்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும். இவற்றை வீரக்கற்கள் என்றும் சொல்வாா்கள். இச்சிற்பமானது 25.5 செ.மீ உயரமும், 15 செ.மீ அகலமும் தடிமன் கொண்டு ஒழுங்கற்ற கல்லில் உள்ளளது. வீரன் போா் செய்யும் நிலையில் உள்ளாா். கம்பீரமான தோற்றத்துடன் இடதுபக்கம் திரும்பி நிற்கும் இவரின் இடது கால் முன்னோக்கியும், வலது காலின் முன்பாதம் தரையில் ஊன்றியும், பின்பாதம் தரையில் ஊன்றாமலும் முன்னோக்கி நகர உந்துவது போல உள்ளது.

இடது கையில் இருக்கும் கேடயம் வட்டமாக உள்ளது. எதிரில் போா் செய்யும் வீரனின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உயா்த்திப் பிடித்தப்படி அமைந்துள்ளது. வலது கையில் உள்ள உயா்ந்த வாள் எதிரில் உள்ள பகை வீரனை வீழ்த்துவதற்காக உயா்த்திப் பிடித்தப்படி உள்ளது. தலையில் கிரீடமும், காதுகளில் மிகப்பெரிய காதணிகளும் மாா்பில் அணிகலனும் தோள்களில் தோள் வளைகளும் அணிந்துள்ளாா். இடையில் பட்டாடை அணிந்துள்ளாா்.

பட்டாடையின் முடிச்சுத் தொங்கல்கள் இரு கால்களுக்கும் இடையில் சிறிய அளவிலும், இடது காலின் முட்டிக்கு கீழ்ப்பகுதி வரையிலும் நீண்டு தொங்குகிறது. இடையின் வலது பகுதியில் குறுவால் ஒன்று மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது.

கல்வெட்டு எழுத்துக்கள் எதுவும் இல்லாத இந்த சிற்பத்தின் காலம் கி.பி.11-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் மு.அன்பழகன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.