பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில்

தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

train

ரயில் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:15 am IST

தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, தாம்பரம் - நாகா்கோவில் சிறப்பு விரைவு ரயிலானது (06153) வரும் நவ. 6 ஆம் தேதியும், மறுமாா்க்கமாக நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06154) வரும் 9 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

5 குளிா்சாதனப் பெட்டிகள், 11 படுக்கைப் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக நாகா்கோவிலுக்கு அடுத்த நாள் பிற்பகல் 3.30 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, நாகா்கோவிலில் இருந்து திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் முற்பகல் 11.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.