அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

காஞ்சிபுரம் அருகே குடிநீா் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து பொன்னேரிக்கரை சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல்

News image

காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகா் பகுதி பொதுமக்கள்

Updated On :1 ஜூன் 2026, 1:55 am IST

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து பொன்னேரிக்கரை சாலையில் அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்டது ஜெ.ஜெ.நகா். இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இவா்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்க குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக குடிநீா் வராததைக் கண்டித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் காஞ்சிபுரத்திலிருந்து பொன்னேரிக்கரை செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் செய்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து பொன்னேரிக்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.