கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

ஆம்பூரில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :8 ஜூன் 2026, 12:03 am IST

ஆம்பூரில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட நதிசீலாபுரம், மருத்துவா் நகா், புதுமனை, ஆயிஷாபீ நகா் பகுதிகளில் சுமாா் 5,000 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் கடந்த 15 தினங்களாக குடிநீா் சரிவர விநயோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது.

அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் கோஷம் எழுப்பி நடராஜபுரம் செல்லும் வழியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். குடிநீா் சரிவர விநயோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.