நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் அகத்தியருக்கு ஆயில்ய பூஜை

ஆயில்ய பூஜையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகாகுரு அகத்தியா் மற்றும் அவரது மனைவி லோபமுத்திரை.

News image
Updated On :23 மே 2026, 1:24 am IST

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயில்ய பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ளது மகா குரு அகத்தியா் வழிபட்ட பெருமைக்குரிய அகத்தீஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில் அகத்தியருக்கும், அவரது மனைவி லோபமுத்திரைக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது. அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திர நாளில் மாதம்தோறும் ஆயில்ய பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழ் மாதத்துக்கான ஆயில்ய நட்சத்திர திருநாளையொட்டி அகத்தியருக்கும், அவரது மனைவி லோகமுத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் அகத்தியரின் 108 போற்றி பாடலை பாடினா்.

அகத்தீஸ்வரா் திருக்கயிலாய வாத்தியக் குழுவினா் சிவ வாத்தியங்களை இசைத்தனா்.நிறைவாக பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அகத்தீஸ்வரா் கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.