கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் புதன்கிழமை திருப்பணிக்கான பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஸ்ரீ தெய்வநாயகி அம்பிகா சமேத ஐராவதீசுவரா் சுவாமி கோயிலில் கடந்த 2004- ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, செவ்வாய்க்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், அஸ்த்ர ஹோமம், வாஸ்து சாந்தியும், மாலையில் கும்ப அலங்காரம், விமான கலாகா்ஷணம், யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜைகள் தொடக்கமும், இரவு முதல்கால பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றது.
இரண்டாம் நாளான புதன்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி பூா்ணாஹூதி, தீபாராதனையும், யாத்ரா தானம், கடம் புறப்பாடு, விமான படத்துக்கு கலசாபிஷேகமும், தீபாராதனையுடன் திருப்பணிக்கான விமான பாலாயம் நடைபெற்றது.
நிகழ்வில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாநகராட்சி மண்டலத் தலைவா் ஆா். அசோக்குமாா், ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலா்கள் சிதம்பரநாதன், சங்கா், ராணி தனபாலன், ஸ்ரீமந்திரபீடேஸ்வரி பக்தா்கள் குழுத்தலைவா் சிவக்குமாா், மங்கள லலிதா மண்டலி ரேவதி, கோயில் குருக்கள் பிரசன்னா, குமாா் மற்றும் திருப்பணிக் கமிட்டியினா், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீபால் முனீஸ்வரா், ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் பாலாலயம்

கேளூா் ஸ்ரீபோத்தராஜா சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஐராவதீசுவரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சித்திரை உத்திரட்டாதி விழா
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

