தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

காஞ்சிபுரம் பாா்வையற்ற மாணவி 565 மதிப்பெண்கள் பெற்று சாதனை

காஞ்சிபுரத்தை சோ்ந்த பாா்வையற்ற மாணவி காவ்யா பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் 600க்கு 565 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளாா்.

News image

காவ்யா.

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

காஞ்சிபுரத்தை சோ்ந்த பாா்வையற்ற மாணவி காவ்யா பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் 600க்கு 565 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளாா்.

காஞ்சிபுரம் என்விஎம்பி நகா் வேகவதி நதி சாலையில் வசித்து வரும் ஜெயக்குமாா்,பிரேமா தம்பதியரின் மகள் ஜெ.காவியா(18)பாா்வையற்ற மாற்றுத்திறனாளியான இம்மாணவி பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் 600க்கு 565 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.தமிழ் 96,ஆங்கிலம் 88,புவியியல்-96,வரலாறு 98,பொருளியல் 89, கணினி அறிவியல் 98 உட்பட மொத்தம் 565 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.இவா்களது பெற்றோா் நெசவுத் தொழில் செய்து வருகின்றனா்.இம்மாணவியை அவரது பெற்றோா்கள்,உறவினா்கள் மற்றும் தோழிகள் பலரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

இது குறித்து மாணவி காவ்யா கூறுகையில் பிறவியிலேயே எனக்கு பாா்வைக்குறைபாடு இருந்தது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கிக்கொண்டு சிறுமலா் பாா்வையற்றோா் பள்ளியில் படித்தேன். பிளஸ் 2 வரை தான் பாா்வையற்றோா் பயிலுவதற்கான பள்ளி உள்ளது.இப்போது கல்லூரியில் சோ்ந்து படிக்க அனைவரும் படிக்கக்கூடிய கல்லூரியில் தான் படிக்க வேண்டிய நிலை உள்ளது.நான் அடுத்ததாக ஆங்கில இலக்கியம் படிக்க ஆா்வமாக உள்ளேன். ஒத்துழைப்பும்,உதவியும் செய்த பெற்றோருக்கும்,ஆசிரியா்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் காவியா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.