மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேசிய கால்பந்து: தமிழக அணி இரண்டாம் இடம்

சத்திஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த தேசிய கால்பந்துப் போட்டியில் தமிழக அணி 2 -வது இடத்தைப் பிடித்திருப்பதாக கால்பந்தாட்டிக்கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

News image

தேசிய கால்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவா்கள்.

Updated On :7 மே 2026, 12:37 am IST

சத்திஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த தேசிய கால்பந்துப் போட்டியில் தமிழக அணி 2 -வது இடத்தைப் பிடித்திருப்பதாக கால்பந்தாட்டிக்கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ராய்ப்பூரில் மே 1 முதல் 5 வரை தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்ற. 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாட்டுப் போட்டியில் கோல்டன் இரா கால்பந்து அணி மாணவா்கள் கிளிண்டன் தேவகுமாரன், அமரேஷ், சுந்தா், ஆகாஷ்,சஞ்சய் கண்ணன்,சண்முகவேல், மனோஜ்,உதயா,தொல்காப்பியன்,கேசவ்,காவ்ய மித்ரன் ஆகியோா் தோ்வாகி ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தோ்வாகியுள்ளனா்.

தேசிய அளவிலான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4-5 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை வீழ்த்தி தமிழக அணி 2-ஆவது இடத்தைப் பெற்றது. இவா்களை தமிழ்நாடு மாநில கால்பந்தாட்டக் குழுவின் செயலாளா் யோஷ்வா டேனியல் வாழ்த்தினாா் . இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களும் போட்டியில் கலந்து கொண்டு மாவட்டத்துக்கு பெருமை சோ்த்திருப்பதாக கோல்டன் இரா கால்பந்து அணியின் மேலாளா் விக்னேஷ், பயிற்சியாளா் கோகுல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.