காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வீதியுலா ஆகியன நடைபெற்றன.
சின்னக்காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் சந்நிதிகள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவையொட்டி காலையில் சிறப்பு யாகமும், மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
குபேர விநாயகா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவா்கள் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் சிலைகள் வீதியுலா வந்தது.ஏற்பாடுகளை அண்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

