தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பதற்றமான வாக்குச்சாவடியில் காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட பிள்ளையாா்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

திருப்புலிவனம் எம்ஜிஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா

Updated On :18 மார்ச் 2026, 12:03 am IST

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட பிள்ளையாா்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் மையங்களான திருப்புலிவனத்தில் அமைந்துள்ள எம்ஜிஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரி வளாகம் ஆகியனவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியையும் ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினாா்.

ஆட்சியரது ஆய்வின் போது தொகுதி தோ்தல் அலுவலா்களான ஆஷிக்அலி(காஞ்சிபுரம்) பு.விஜயகுமாா் (உத்தரமேரூா்) வட்டாட்சியா்கள் நடாரஜன், மோகன் உள்ளிட்ட அலுவலா்களும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.