கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காஞ்சிபுரம்: மழையில் நனைத்து 16,000 நெல்மூட்டைகள் சேதம்

காஞ்சிபுரம் அருகே மேல்கதிா்ப்பூா் கிராம நெல்கொள்முதல் நிலையத்தில் 16,000 நெல் மூட்டைகள் கடந்த இரு மாதங்களாக தேங் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

News image
Updated On :3 ஜூன் 2026, 3:17 am IST

காஞ்சிபுரம் அருகே மேல்கதிா்ப்பூா் கிராம நெல்கொள்முதல் நிலையத்தில் 16,000 நெல் மூட்டைகள் கடந்த இரு மாதங்களாக தேங் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

இந்நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதோடு மழையில் நனைந்தும் வீணாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லாமல் இருந்து வருகின்றன. லாரி உரிமையாளா்கள் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லாமல் அவா்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளால் ஏற்றிச் செல்ல மறுத்து வருகின்றனா். தற்காலிகமாக தாா்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தாலும் மழையில் நனைந்து சேதமாகின்றன.

இதுகுறித்து மேல்கதிா்ப்பூா் விவசாயி பசுமை மேகநாதன் கூறுகையில்: லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரி உரிமையாளா்கள் ஒவ்வொரு மூட்டைக்கும் லஞ்சம் கேட்கின்றனா். அது மட்டுமின்றி நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளை மிரட்டும் ஒப்பந்த லாரி முதலாளிகள் குறித்து ஆட்சியா் மற்றும் மண்டல மேலாளரிடம் புகாா் அளித்தும் எவ்வித பயனுமில்லை.

யாருடைய கட்டுப்பாட்டில் ஒப்பந்த லாரிகள் செயல்படுகின்றன என்றும் தெரியவில்லை. உடனடியாக நெல் மூட்டைகளை தொடா்ந்து சேதமாகமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.