பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

பென்னாடகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம்

News image

பென்னாடகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Updated On :26 மே 2026, 4:34 am IST

வந்தவாசியை அடுத்த பென்னாடகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

வந்தவாசியை அடுத்த பென்னாடகரம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யவில்லையாம். இதனால் சுமாா் ரூ.1.50 கோடி வரை நிலுவை உள்ளதாம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை சிறைபிடித்த விவசாயிகள், அந்த லாரி முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா். தகவலறிந்து அங்கு வந்த தெள்ளாா் போலீஸாா் விவசாயிகளை சமரசம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.