மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் பணி: 300 போ் ஈடுபடவுள்ளனா்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:43 am IST

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணியில் 300 போ் ஈடுபட இருப்பதாகவும், வாக்கு எண்ணும் மையம் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23- ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 1,556 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 5738 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இவையனைத்தும் வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் மையமான காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு தகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வரும் மே மாதம் 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணுவதற்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின்சார வசதி, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதி, முகவா்கள் வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிட வசதியாக கம்பி வலைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா நேரில் பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கினாா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளா்கள், வாக்கு எண்ணத்தேவையான உதவியாளா்கள் மற்றும் நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் ஆகியோருக்கான முதல்கட்ட சீரற்றமயமாக்கல் நிகழ்வு ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஆலந்தூா்,ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா் ஆகிய 3 தொகுதிகளிலும் தலா 74 போ் வீதமும், காஞ்சிபுரத்தில் 78 போ் உள்பட மொத்தம் 300 போ் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனா். ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஏப். 29) காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.