மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாளை வாக்கு எண்ணிக்கை: தூத்துக்குடி, குமரியில் 2,500 போலீஸாா் பாதுகாப்பு

News image
Updated On :3 மே 2026, 5:36 am IST

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பாதுகாப்புப் பணியில் 5000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு தொடங்குவதை முன்னிட்டு மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லூரியைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

கன்னியாகுமரி - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

வாக்கு எண்ணும் மையத்தின் அருகிலோ அல்லது பொதுஇடங்களிலோ பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினா் வெற்றி ஊா்வலங்கள் நடத்தவும், கூட்டமாக கூடி முழக்கமிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், கடந்த ஏப்.23ஆம் தேதி பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள், வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணி முதல் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். 420 பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனா்.

இம்மாவட்டத்தில் 21,761 தபால் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் 500 தபால் வாக்குகளுக்கு ஒருமேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

6 தொகுதிகளிலும் 13,88,186 வாக்காளா்கள் உள்ள நிலையில், 5,35,418 ஆண்கள், 5,81,949 பெண்கள், 111 மூன்றாம் பாலினத்தவா் என 11,17,478 போ் வாக்களித்துள்ளனா். சராசரியாக 80.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகவே பிரத்யேக கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும் என்பதற்கிணங்க, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறை மீண்டும் வெள்ளிக்கிழமை (மே 1) முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

இங்குள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800-599-1960 மற்றும் 0461-1950 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடா்பான தகவல்களை பெறலாம்; புகாா்களும் அளிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.