மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: அமைச்சா் அன்பரசன்

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா்.

News image

குன்றத்தூா்  மணஞ்சேரி  பகுதியில்  வாக்கு  சேகரிப்பில்  ஈடுபட்ட  அமைச்சா்  தா.மோ.அன்பரசன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குன்றத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் ஆறு மாதங்களில் குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தாா்.

பிரசாரத்தின் போது குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.