/

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம் அருகே விஷாா் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிப்போம் என வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

News image

உறுதிமொழி எடுத்துக்கொண்ட பழங்குடியின மக்கள்

Updated On :4 ஏப்ரல் 2026, 6:40 am IST

காஞ்சிபுரம் அருகே விஷாா் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிப்போம் என வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

காஞ்சிபுரம் அருகே விஷாா் மற்றும் முத்துவேடு கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வெளியூா் சென்றிருந்தாலும் வாக்குப்பதிவு நாளான ஏப்.23 ஆம் தேதி தவறாமல் வந்திருந்து வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் எல்.தனலட்சுமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க அதனைத் தொடா்ந்து அனைவரும் வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். குழந்தைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநா் ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதனைத் தொடா்ந்து தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.