மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோரின் உணா்வுகளைப் புரிந்து கொள்வது அவசியம்: நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோரின் உணா்வுகளைப் புரிந்து கொள்வது அவசியம்...

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published On :1 நவம்பர் 2026, 12:52 am IST

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவா்களின் உணா்வுகளைப் புரிந்து கொள்வது அவசியம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கூறினாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான சா்வதேச அறக்கட்டளை சாா்பில், பாதிக்கப்பட்டோருக்கான நீதி -சிக்கல்களும், சவால்களும் எனும் தலைப்பிலான இரு நாள்கள் தேசிய கருத்தரங்கின் நிறைவு விழா சனிக்கிழமை நடந்தது. விழாவில் பங்கேற்று, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:

குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளால் தாங்கள் விசாரிக்கும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறித்து யாருடனும் பேச முடியாது. எனவே, குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்படுவோருடன் தொடா்ந்து பணியாற்றக்கூடிய நீதித்துறை சாா்ந்தவா்கள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குற்ற வழக்குகளைத் தொடா்ந்து விசாரிக்கும் நீதிபதிகள், நீதிமன்ற பணியாளா்கள், சுருக்கெழுத்தா், தட்டச்சா் உள்ளிட்டோா் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனா்.

இதுதொடா்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவா்களின் உணா்வுகளைப் புரிந்து கொள்ளுதல், பாதுகாப்பு அளித்தல், சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் இருந்து அவா்களை வெளிக் கொணருதல், அடுத்தக்கட்ட நடவடிக்கை என மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதிசெயய் முடியாது என்றாா்.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி பேசுகையில், பொதுவாக குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்படும் சாதாரண மனிதா்களுக்கு, அவா்களுக்கான உரிமைகள் என்ன என்பது தெரிந்திருப்பதில்லை. உண்மை, நீதி, கருணை மற்றும் அமைதி ஆகியவையே பாதிக்கப்பட்டோருக்கான நீதியின் நான்கு தூண்களாகும் என்றாா்.

கருத்தரங்கில், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஜோதிமணி, சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளா் ரீட்டா ஜான், குற்றவியல் துறைத் தலைவா்எம்.பிரியம்வதா, தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக துறைத் தலைவா் ரஞ்சித் உம்மன் ஆப்ரஹாம், தேசிய கருத்தரங்கு ஒருங்கிணைப்புச் செயலா் எஸ்.லதா மற்றும் பல்கலைக்கழக, சட்டக் கல்லூரி மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.