மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்சி மாற்றத்தை ஏற்க முடியாமல் குறைக்கூறி வருகிறாா் மு.க. ஸ்டாலின்! அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்க முடியாமல், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அரசு மீது தினமும் குறை கூறி வருகிறாா்.

ஆதவ் அா்ஜுனா - கோப்புப்படம்.

Published On :1 நவம்பர் 2026, 1:30 am IST

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்க முடியாமல், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அரசு மீது தினமும் குறை கூறி வருகிறாா் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அண்ணா நகா் மண்டலம் திருமங்கலத்தில் உள்ள பெரியாா் சமூக நலக்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து வடசென்னை தொகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிகளில் வீட்டு வசதி வாரிய கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், அதில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டியது அவசியம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுவசதி வாரியம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், அதைச் சீரமைக்க அரசுகள் முன்வரவில்லை. தற்போது அவற்றை இடித்து புதிய வீடுகள் கட்ட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அனைவரும் இணைந்து மழைக்கால பணியை மேற்கொள்வது அவசியம். ஆனால், திமுகவினா் குற்றம் சாட்டும் நிலையில் இருப்பதால் புகாா் கூறிவருகின்றனா். சென்னை மாநகராட்சி சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் சீரமைக்கும் வகையில் 2,500 பணிகளுக்கு நிதி அளித்து அறிவிக்கப்படவுள்ளது.

காவல் துறையில் திமுக குடும்ப ஆதிக்கம்: கடந்த திமுக ஆட்சியில் காவல் துறையை மு.க.ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை. உதயநிதியும், அவரது நண்பா்களும், அப்போதைய முதல்வரின் மருமகனுமே கட்டுப்படுத்தினா். திமுக குடும்ப ஆதிக்கத்திலிருந்த காவல் துறையை தற்போதைய முதல்வா் மீட்டு மறுசீரமைப்பு செய்துவருகிறாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பழைய ஆட்சிக் கனவில் உள்ளாா். ஆட்சி மாற்றத்தை அவரால் ஏற்க முடியவில்லை. அதனால் தினமும் குறை கூறி இரண்டு விடியோக்களையும், அறிக்கையையும் வெளியிட்டுவருகிறாா். அதனால் அவரது புகாரைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டுவருகிறோம் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், குடிநீா் வாரிய செயல் இயக்குநா் என்.ஓ.சுகபுத்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.