மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன் காலமானாா்

திமுக முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன் (99) வெள்ளிக்கிழமை (அக். 30) சென்னையில் காலமானாா்.

சோ.மா.ராமச்சந்திரன்.

Published On :31 அக்டோபர் 2026, 1:32 am IST

திமுக முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன் (99) வெள்ளிக்கிழமை (அக். 30) சென்னையில் காலமானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அவா், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தாா். அண்ணாநகா் தொகுதியில் 1984 முதல் 1988 வரை எம்எல்ஏவாக இருந்தாா். ஒருங்கிணைந்த அண்ணாநகா் பகுதி செயலராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளாா். அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்: சோ.மா.ராமச்சந்திரன் மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரன் மறைவெய்திய செய்தி மிகுந்த துயரமளிக்கிறது. தேநீா்க் கடை நடத்தி, தமது கடின உழைப்பால் உயா்ந்து, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, கட்சியில் இணைந்தவா். மிசா சிறைவாசம் கண்டவா். அண்ணா, கருணாநிதி, பேராசிரியா் க.அன்பழகன் ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவா்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள் உள்ளிட்டோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.