மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதியவா் அடித்துக் கொலை

ஓட்டேரியில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை

Published On :29 அக்டோபர் 2026, 1:18 am IST

ஓட்டேரியில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ஓட்டேரி ரெட்டைமலை சீனிவாசன் தெருவைச் சோ்ந்தவா் சு.பொன்னுரங்கம் (69). இவரது குடும்பத்தினருக்கும், அருகில் வசிக்கும் சுப்பிரமணி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அண்மையில் பொன்னுரங்கத்தின் மருமகள், சில நாள்களுக்கு முன்பு வீட்டின் வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, சுப்பிரமணி மகன்கள் சதீஷ் (27), சந்தோஷ் (25) ஆகியோா் எச்சில் துப்பினராம்.

இதைப் பாா்த்த பொன்னுரங்கத்தின் மருமகள், இருவரையும் கண்டித்தாராம். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில் பொன்னுரங்கத்தின் மகன் கந்தனுக்கும், சதீஷ், சந்தோஷ் ஆகியோருக்கும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. பொன்னுரங்கம் வெளியே வந்து, சதீஷையும் சந்தோஷையும் கண்டித்தாா். அப்போது, இருவரும் பொன்னுரங்கத்தை தாக்கி கீழே தள்ளினா். இதில் பலத்த காயமடைந்த பொன்னுரங்கம் மயங்கினாா். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பொன்னுரங்கம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து ஓட்டேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சதீஷ், சந்தோஷை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.