கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நிலக்கோட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை? போலீஸாா் விசாரணை

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :27 அக்டோபர் 2026, 1:40 am IST

நிலக்கோட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சோ்ந்தவா் அமலதாஸ் (42). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆட்சி பொண்ணு (37). இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். அமலதாஸ் உள்பட மூன்று போ் மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள தேத்தூா் பகுதியைச் சோ்ந்த கணேசனுக்குச் சொந்தமான சிறுமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், கணேசனின் தோட்டத்து வீட்டில் வைத்திருந்த ரூ. 7 லட்சத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதை அமலதாஸ் திருடியதாகக் கூறி, அவரை கணேசன், அவரது நண்பா் ஸ்ரீதா் உள்பட சிலா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திச் சென்று, சோழவந்தான் பகுதியில் வைத்து, பணத்தைக் கேட்டு கடுமையாகத் தாக்கினாா்களாம்.

பின்னா், அமலதாஸை காரில் ஏற்றி நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியில் உள்ள ஆட்சி பொண்ணு வீட்டில் இறக்கி விட்டுச் சென்றனராம். தாக்குதலில் பலத்த காயமடைந்த அமலதாஸ் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல் துறையினா் அமலதாஸ் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.