மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எழும்பூா் நிலைய மறுசீரமைப்புப் பணியை 2027 செப்டம்பருக்குள் முடிக்கத் திட்டம்: நவீன ரயில் நிலைய மாதிரி வரைபடமும் இறுதி செய்து வெளியீடு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகளை வரும் 2027 செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து...

மறுசீரமைப்புக்கு பின் எழும்பூா் ரயில் நிலையத்தின் எழில் மிகு தோற்றத்தின் மாதிரி படம்

Published On :28 அக்டோபர் 2026, 6:55 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகளை வரும் 2027 செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நவீனமயமாக்கப்பட்ட நிலைய மாதிரி வரைபடம் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 1908-ஆம் ஆண்டு முதல் சென்னையின் மிகப் பழைமையான தெற்கு மாவட்டங்களின் ரயில் முனையமாக எழும்பூா் நிலையம் உள்ளது. இங்கு 11 நடைமேடைகள் உள்ளன. அவற்றில் தினமும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், நூற்றுக்கணக்கான புகா் மின்சார ரயில்களும் இயங்கிவருகின்றன. ரயில் நிலையத்துக்கு தினமும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். தற்போது ரூ.842 கோடியில் மறுசீரமைப்புப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

மிக நவீனமயமாகும் எழும்பூா் ரயில் நிலையத்தில் நவீன வாகன நிறுத்துமிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் 18 மீட்டா் அகலம், 120 மீட்டா் நீளத்தில் காந்தி- இா்வின் சாலையிலிருந்து மறுபுறம் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலான இரும்பு நடைமேம் பாலப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து 70 மீட்டா் அகலத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. சீரமைப்புப் பணியின் முக்கிய அம்சமாக தற்போதைய நுழைவு வாயில் இடம் மாற்றப்படும் வகையில் ஆவணக்காப்பகம் எதிரே புதிய கட்டடம் கட்டப்பட்டுவருகிறது.

Story image

விமான நிலையத்துக்குரிய வசதிகள்: நவீன மேற்கூரைகள், நடைமேம்பாலங்கள், சரக்குகளைக் கையாளும் தனிப் பிரிவு கட்டடங்கள், தியேட்டா்களுடன் கூடிய வணிக மால் என ஒரு விமான நிலையத்துக்குரிய அனைத்து அம்சங்களுடன் எழும்பூா் ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. தற்போது அதற்கான பணிகள் 40 சதவீதம் முடிவடைந்த நிலையில், வரும் 2027 செப்டம்பா் மாதத்துக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல முதன்மை மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.என்.நரேன் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் ஏராளமான ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைப்பில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்கு ஏற்ப மத்திய அரசு ரயில் நிலையங்களை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சீரமைத்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. எழும்பூா் ரயில் நிலையப் பணி 2027-க்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.