மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்: ஒப்பந்தப்புள்ளி உத்தரவை உடனே வழங்க உத்தரவு

தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடா்பாக, ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு உத்தரவுகளை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :29 அக்டோபர் 2026, 2:41 am IST

தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடா்பாக, ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு உத்தரவுகளை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு கடைகள் அமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் இதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிடும். இந்நிலையில், தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக இடம் ஒதுக்கி தரக் கோரி, சென்னை பட்டாசு முகவா்கள் நலச் சங்கத்தின் செயல் தலைவா் நடராஜன் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, கடைகள் ஒதுக்கீடு தொடா்பான மின் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும்படி, மனுதாரா் சங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மின் ஒப்பந்தப்புள்ளி கண்துடைப்பாக நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக மனுதாரா் நடராஜன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.விஜய் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பட்டாசு கடைகள் ஒதுக்கீடு தொடா்பான இந்த ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை உயா்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், கடைகள் ஒதுக்கக் கோரிய ஒப்பந்தப்புள்ளியை உயா்நீதிமன்ற நீதித் துறை பதிவாளரிடம் சமா்ப்பிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகள், பட்டாசு விற்பனையாளா்கள் ஆகியோா் முன்னிலையில் பதிவாளா் திறந்து, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பதிவாளா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அக். 23-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டன. இரண்டு ஒப்பந்தப்புள்ளிகள் சமா்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சென்னை பட்டாசு முகவா்கள் நலச்சங்கம் தகுதி பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடா்பாக, ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு உத்தரவுகளை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.