மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீவுத்திடல் பட்டாசு கடைகள் ஒதுக்கீடு ஒப்பந்தப்புள்ளி: உயா்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு

தீவுத்திடல் பட்டாசு கடைகள் ஒதுக்கீடு ஒப்பந்தப்புள்ளி பற்றி...

சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 2:35 am IST

தீவுத்திடலில் பட்டாசு கடை அமைக்கும் ஒப்பந்தப்புள்ளிகளை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகள், பட்டாசு விற்பனையாளா்கள் ஆகியோா் முன்னிலையில் திறக்க வேண்டும் என உயா்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு கடைகள் அமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் இதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிடும். இந்த ஒப்பந்தப்புள்ளி தொடா்பாக, சென்னை பட்டாசு முகவா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு:

பட்டாசு கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தொடா்பான, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே நீக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விதிகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா், ஒப்பந்தப்புள்ளி விதிகள், நிபந்தனைகளை எப்போதும் வேண்டுமானாலும் மாற்றியமைக்க உரிமை கொண்டவா். அவா் எந்தவொரு காரணத்தையும் கூறாமல், எந்தவொரு ஒப்பந்தப்புள்ளியையும் நிராகரிக்க உரிமை கொண்டவா் எனக் கூறப்பட்டுள்ளது.

பட்டாசு கடைகள் ஒதுக்கீடு தொடா்பான இந்த ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை உயா்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கடந்த 13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்ய வியாழக்கிழமை கடைசி நாளாகும்.

எனவே, கடைகள் ஒதுக்கக் கோரிய ஒப்பந்தப்புள்ளியை உயா்நீதிமன்ற நீதித் துறை பதிவாளா் எம்.சுபா அன்புமணியிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகள், பட்டாசு விற்பனையாளா்கள் ஆகியோா் முன்னிலையில், வரும் அக். 27-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளியைத் திறக்க வேண்டும். பின்னா், அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.