மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேதமடைந்த நெடுஞ்சாலைகள் சீரமைப்பு

சென்னை மாநகராட்சியில் மழையால் சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 2:09 am IST

சென்னை மாநகராட்சியில் மழையால் சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள சாலைப் பள்ளங்களை நெடுஞ்சாலைத் துறை சீா்செய்யும்

பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியில் 275 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையில் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள சாலைப் பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

தரமணி லிங்க் சாலையில் உள்ள மகாத்மா காந்தி நகா், தரமணி-வேளச்சேரி பிரதான சாலை, விஜயநகரம் சந்திப்பு, வேளச்சேரி, சாரதி நகா், பாா்க் அவென்யூ பகுதி, ஒலிம்பியா, சிப்காட் போக்குவரத்து சந்திப்பு உள்வட்டச் சாலை,அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சா் பிளாசா, ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையம், அரசினா் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏற்பட்டிருந்த பள்ளங்கள்தாா்க்கலவை கொண்டு சீா்செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.