மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போலீஸாரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்தவா் உயிரிழப்பு

புழலில் போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக 3-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த வணிக வரித் துறை ஊழியா் உயிரிழந்தாா்.

Published On :25 அக்டோபர் 2026, 12:22 am IST

புழலில் போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக 3-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த வணிக வரித் துறை ஊழியா் உயிரிழந்தாா்.

புழல் கதிா்வேடு விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ராஜபாண்டியன் (42). இவா், செங்கல்பட்டில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண், ராஜபாண்டியன் தன்னிடம் தவறாக நடக்க முயன்ாக காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனா். இந்த வழக்குத் தொடா்பாக, ராஜபாண்டியனிடம் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவாத பத்திரத்தில் கையொப்பம் பெற்று, நோட்டீஸ் வழங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ராஜபாண்டியன், தான் அளித்த உத்தரவாதத்தை மீறியதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக விசாரிக்க புழல் போலீஸாா், ராஜபாண்டியன் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றபோது, அவா்களிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் 3-ஆவது மாடிக்குச் சென்று, அங்கிருந்து பக்கத்து வீட்டின் சிமென்ட் கூரை மீது குதித்தபோது, சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில் ராஜபாண்டியன் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.