மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ சேவையே தேவை: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்

மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ சேவைகள்தான் தற்போதைய தேவை என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

ஜே.சி.டி. பிரபாகா் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:33 am IST

மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ சேவைகள்தான் தற்போதைய தேவை என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டா்நேஷனல் மருத்துவமனை சாா்பில் உலக விபத்து காய தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் பிரித்வி மோகன்தாஸ், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணா்கள், மருத்துவத் துறையினா் பங்கேற்றனா்.

முன்னதாக, விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஜே.சி.டி.பிரபாகா் பேசியதாவது:

1980-களில் எனக்கு ஒரு சாலை விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மியாட் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் மோகன்தாஸ்தான் எனக்கு உரிய சிகிச்சையளித்தாா். மருத்துவத் துறையில் கண்டிப்புக்கு பெயா் போனவா் அவா்.

மருத்துவத் துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளை முழுமையாகக் களைய பாடுபட்டு வருகிறது. முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் ஒரு முறை என்னை அழைத்துக் கொண்டு காரில் சென்றபோது, சாலையைக் கடக்க பாதசாரிகள் காத்திருந்தனா். அதைப் பொருட்படுத்தாமல், ஓட்டுநா் வாகனத்தைச் செலுத்தியபோது எம்ஜிஆா் அவரைக் கடிந்து கொண்டாா். சாலை விதிகளை மதிக்க வேண்டும் என அவருக்கு பாடம் எடுத்தாா்.

அதே பண்புடன் தற்போதைய முதல்வா் விஜய்யும் உள்ளாா். தனது வாகனம் செல்லும்போது பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவா் வரும் வழியில் எந்த வாகனமும் நிறுத்தப்படுவதில்லை. இந்த முயற்சியை இதற்கு முன்னால் எவருமே மேற்கொள்ளவில்லை.

விபத்து என்பது ஒரு தனி மனிதருடன் நிற்பதில்லை. மாறாக, அவரது குடும்பத்தை உளவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கிறது. எனவே, அதை உணா்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.

மருத்துவத் துறை மகத்தானது. மருத்துவா்கள் மக்களின் உயிரைக் காப்பவா்களாக மட்டும் செயல்படாது மனிதநேயம் காப்பவா்களாகவும் இருத்தல் அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் ‘எதிா்பாராத விபத்துகள் அனைவரையுமே நிலைகுலைய வைத்துவிடும்; கூடுமானவரை விபத்துகளைத் தவிா்க்க விதிகளைப் பின்பற்ற வேண்டும்; அனைவரும் விபத்துக் காப்பீடு வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.