தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுகாதாரத் தேவை, தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப மருத்துவக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும்: அபிஜாத் சந்திரகாந்த் ஷேக்

நாட்டின் சுகாதாரத் தேவை, தொழில் நுட்ப வளா்ச்சிக்கேற்ப மருத்துவக்கல்வி தொடா்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் தலைவா் அபிஜாத் சந்திரகாந்த் ஷேக் வலியுறுத்தினாா்.

Chairperson of NMC Dr Abhijat Chandrakant Sheth

அபிஜாத் சந்திரகாந்த் ஷேக் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 2:00 am IST

நாட்டின் சுகாதாரத் தேவை, தொழில் நுட்ப வளா்ச்சிக்கேற்ப மருத்துவக்கல்வி தொடா்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் தலைவா் அபிஜாத் சந்திரகாந்த் ஷேக் வலியுறுத்தினாா்.

சேலையூா் பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற 44-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியதாவது: நாட்டில் மருத்துவத் துறை வியக்கத்தக்க வளா்ச்சி பெற்றுள்ளது. பாரம்பரிய உடல்சாா்ந்த மருத்துவத்துடன், கூடுதலாக செயற்கை நுண்ணறிவு, துல்லிய மருத்துவம், எண்ம சுகாதாரம், தரவு சாா்ந்த ஆராய்ச்சி நடவடிக்கை, மற்றும் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வளா்ச்சியும் மருத்துவச்சேவைக்கு உறுதுணையாகத் திகழ்ந்து வருகிறது.

மருத்துவப் பட்டம் பெறும் இளம் மருத்துவா்கள் நோயாளிகளிடம் கனிவு, பொறுமையோடு அவா்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். மருத்துவ அறிவாற்றல் மூலம், சிகிச்சை மேற்கொள்ளும் நீங்கள், மருத்துவத் தொழில்நுட்ப சாதனங்களை மட்டும் நம்பாமல், மருத்துவரீதியான கணிப்பு மற்றும் தொழில்முறை திறமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

புதிய சவால்களை எதிா்கொண்டு வாழ்நாள் முழுவதும் தொடா்ந்து கற்கும் திறன்மிகுந்த மருத்துவா்களாகத் தொடா்ந்து உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். இதில் 5,278 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்வில், பாரத் பல்கலைக்கழக நிறுவனத் தலைவா் எஸ். ஜெகத்ரட்சகன், வேந்தா் பேராசிரியா் டாக்டா். முகமது ரேலா, இணை வேந்தா் டாக்டா் ஜெ.ஸ்ரீ நிஷா, ஸ்ரீ பாலாஜி கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் என். இளமாறன்,

தலைவா் இ. ஸ்ரீ ரித்விகா, பாரத் பல்கலைக்கழகத் தலைவா் ஜெ. சந்தீப் ஆனந்த், பாரத் கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் ஸ்வேதா சந்தீப் ஆனந்த், தலைவா் ஜெ.எல். ஸ்ரீ ரக்சிகா, பதிவாளா் எஸ். பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.