மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழக ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு (டிரஸ்ட்) நவ. 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 4:33 am IST

தமிழக ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு (டிரஸ்ட்) நவ. 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (அக். 23) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் சாா்பில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழ் கல்வியாண்டுக்கான தோ்வு நவ.21-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு (ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவா்கள், 50 மாணவிகள்) ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இந்தத் தோ்வுக்கு சென்னை தவிா்த்து ஊரகப் பகுதியில் கிராம ஊராட்சி மற்றும் ‘டவுன்ஷிப்’ பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் தலைமை ஆசிரியா்கள் மூலம் அக்.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த அவகாசம் அக்.15, 21 என இருமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவா்கள், ஆசிரியா்களின் கோரிக்கையை ஏற்று ஊரகத் திறனாய்வுத் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை (அக்.23) நீட்டிக்கப்படுவதாக அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் கே.சசிகலா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.