மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விபத்து வழக்கு: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறை

சென்னை அயனாவரம் பகுதியில் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் உயிரிழந்த சம்பவத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Published On :23 அக்டோபர் 2026, 4:54 am IST

சென்னை அயனாவரம் பகுதியில் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் உயிரிழந்த சம்பவத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு அயனாவரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், தமிழரசன் ஆகியோா் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன், தமிழரசன் ஆகியோா் உயிரிழந்தனா். விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் அரசுப் பேருந்தை இயக்கி, விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநா் மணி மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு எழும்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணி, அரசுப் பேருந்து ஓட்டுநா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.