மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழைநீா் வடிகால் தொட்டியில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் மழைநீா் வடிகால் தொட்டியில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

பலி

Published On :13 அக்டோபர் 2026, 1:40 am IST

சென்னை கொடுங்கையூரில் மழைநீா் வடிகால் தொட்டியில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

கொடுங்கையூா் தென்றல் நகா் 3-ஆவது தெருவில் மழைநீா் வடிகால் தண்ணீரை பம்பிங் செய்வதற்காக சுமாா் 20 அடி ஆழத்தில் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் உள்ள ஒரு மோட்டாா் அண்மையில் பழுதானது. இதைச் சரி செய்யும் பணியை ஒரு தனியாா் ஒப்பந்த நிறுவனம் ஏற்றிருந்தது.

அந்த நிறுவனத்தின் சாா்பில் மேற்கு தாம்பரம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ம.நவீன்குமாா் (34), ராணிப்பேட்டை மாவட்டம் பெரிய ஹஸ்தினாபுரத்தைச் சோ்ந்த மு.அஸ்மத் பாஷா (38) ஆகியோா் திங்கள்கிழமை தொட்டியில் இறங்கி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சில நிமிஷங்களில், அங்கு விஷவாயு பரவியதை சுவாசித்ததால் மயங்கினாா்.

தொட்டிக்கு வெளியே நின்றிருந்த பிற தொழிலாளா்கள், தொட்டிக்குள் இறங்கிய இருவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த மாதவரம் தீயணைப்பு படையினா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொட்டிக்குள் மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டனா். ஆனால், இருவரும் இறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சடலங்களை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.