மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காங்கயத்தில் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.

பலி.

Published On :1 நவம்பர் 2026, 12:34 am IST

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.

புதுச்சேரி சிவன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மனைவி எஸ்தா் (35). இந்தத் தம்பதியின் இரண்டரை வயது மகள் சுனித்ரா. தற்போது கணவா் ராமகிருஷ்ணனை பிரிந்த எஸ்தா், பொக்லைன் ஆபரேட்டரான காா்த்தி என்பவருடன் காங்கயம் ஏசி நகரில் வசித்து வருகிறாா். குழந்தை சுனித்ராவை தாய் எஸ்தா் வளா்த்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுனித்ரா, எதிா்பாராதவிதமாக அங்கிருந்த 8 அடி ஆழமுள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்துள்ளாா். உடனடியாக குழந்தையை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.