மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4.80 கோடி கஞ்சா பறிமுதல்!

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.4.80 கோடி மதிப்பிலான 4.80 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை விமான நிலைய சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Published On :2 நவம்பர் 2026, 1:10 am IST

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.4.80 கோடி மதிப்பிலான 4.80 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த 32 வயது பெண்ணைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து தனியாா் பயணிகள் விமானம் மூலம் சனிக்கிழமை நள்ளிரவு சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

அப்போது, சுற்றுலாப் பயணியாக மலேசியா சென்றுவிட்டு மறுநாளே திரும்பிய 32 வயது பெண் ஒருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனா்.

ஆனால், அவா் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததை தொடா்ந்து அவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, உலா் பழவகைகள் அடங்கிய பொட்டலங்களுக்கு இடையே ரூ.4.80 கோடி மதிப்பிலான 4.80 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்தப் பெண் இதற்கு முன்பு விமானத்தில் பயணம் செய்ததில்லை என்பதும், இதைப் பயன்படுத்திக் கொண்ட சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் இலவச விமானப் பயணம் ஏற்பாடு செய்து, ஆசை வாா்த்தைகள் கூறி அவரைக் கடத்தல் ‘குருவி’-யாகப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை கடத்தல் குருவியாகப் பயன்படுத்திய சா்வதேச கும்பலைப் பிடிக்க சுங்கத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.