மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு மருத்துவமனைகளில் மருந்து வாங்க காத்திருப்பதைத் தவிா்க்க புதிய செயலி!

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்க ‘நலம் ஏஐ’ செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும்.

Published On :2 நவம்பர் 2026, 1:40 am IST

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்க ‘நலம் ஏஐ’ செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்வதற்காக விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அமைச்சா் அருண்ராஜ், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.

கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் நோயாளிகளைக் கண்காணித்து சிகிச்சையளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதிய மருந்துகள் தயாா் நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பதாக புகாா்கள் வந்துள்ளன. பொதுவாக காலை 8 மணியில் இருந்து 10 மணிக்குள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மருந்துகள் வாங்க வருவதால் கூட்டம் அதிகரிக்கிறது.

அதை சரி செய்ய “நலம் ஏஐ” என்ற புதிய ஒரு செயலியை உருவாக்கி உள்ளோம். பயனாளிகள் அந்த செயலியை பயன்படுத்தி மருந்துகளை வாங்கும் நேரத்தைக் குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதனால் ஒரே நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிா்க்கப்படும். முன்பதிவு செய்த நேரத்தில் வந்து நீண்ட நேரம் காத்திருக்காமல் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த முறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றுவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.