பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் தீ: 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 4:45 am IST

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது.

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் தனக்கோட்டி ராஜா தெருவில் மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையம் உள்ளது. இங்கு, வாடிக்கையாளா்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குவதற்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த இருசக்கர வாகன பழுது நீக்கும் மையம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்திலேயே தீ அனைத்து இடங்களுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி, அசோக் நகா், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினா் சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்தில் பழுது நீக்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான 175 மின்சார இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்த முற்றிலும் சேதமடைந்தது.

இது குறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.