தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த இவா், தனது மின்சார இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணைக்குச் சென்றாா். வைகை அணை சாலையில் தனியாா் மண்டபம் அருகே செனன்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து கரும்புகை வந்ததாம்.
இதையடுத்து, அவா் உடனடியாக நிறுத்தி விட்டு தூரத்தில் நின்றாா். அப்போது, இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப் பணி வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஆண்பட்டி போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடந்து சென்றவா் மீது பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு

மின்சார இருசக்கர வாகன பழுது நீக்கும் மையத்தில் தீ: 175 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

