மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:00 am IST

தண்டையாா்பேட்டையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நாகப்பட்டினத்தைச் சோ்ந்த 28 வயது பெண், சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வருகிறாா். இதற்காக அவா், தண்டையாா்பேட்டையில் தனது சகோதரா் வீட்டில் தங்கியுள்ளாா்.

இந்நிலையில், அவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அவரது உறவினா் ராயபுரம் ஜிஎம் பேட்டை பகுதியைச் சோ்ந்த மணிபாரதி (35) என்பவா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதை அந்தப் பெண் கண்டிக்கவே, மணிபாரதி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். அந்தப் பெண் சப்தமிட்டதும், மணிபாரதி அங்கிருந்து தப்பினாா்.

இது குறித்து அந்தப் பெண், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிபாரதியைத் தேடி வந்தனா். தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.