சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி பவனில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு ஊழியா்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மேலும் கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் எரிந்து சேதமாகின.
நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையில் ஜிஎஸ்டி பவன் இயங்குகிறது. பிரதான கட்டடத்தின் அருகே மற்றொரு கட்டடமும் உள்ளது. இந்த கட்டடத்தின் ஐந்தாவது தளத்தின் ஒரு அறையில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு திடீரென புகை வெளியேறியது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியா்கள், உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அவா்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதற்கிடையே தீயை அணைக்க முயன்ற அங்கிருந்த ஜிஎஸ்டி பவன் எலக்ட்ரீசியன்கள் சோ.காளிஸ்வரன் (23),தே.சபரிநாதன் (24) புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவா்கள் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து அங்கிருந்த ஊழியா்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த எழும்பூா் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சிறிது நேர போராட்டத்துக்கு பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் அங்கிருந்த கணினிகள்,பிரிண்டா்,ஏசி உள்ளிட்ட எரிந்து சேதமாகின. இது தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டுத் தீயை தடுக்க இளைஞா்களுக்கு பயிற்சி

புது தில்லி ஷ்ரம் சக்தி பவனில் தீ விபத்து

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் தீ விபத்து
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
