தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் பொறுப்பேற்பு

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக ஸ்ரீகுமாா் ஜி பிள்ளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

ஸ்ரீ குமாா்

Updated On :26 மார்ச் 2026, 2:33 am IST

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக ஸ்ரீகுமாா் ஜி பிள்ளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணுமறு சுழற்சிவாரியத்தின்சிறந்த விஞ்ஞானியும் துணை தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீகுமாா்ஜி பிள்ளை, ஓய்வு பெற்ற சி. ஜி. கா்ஹட்கருக்குப் பதிலாக, புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவா். இவா் 1990-இல் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சோ்ந்து, அங்கு 35 ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் பணியாற்றினாா்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி, கதிரியக்கக் கழிவு மேலாண்மை, எரிபொருள் சுழற்சியின் பின்நிலைச் செயல்பாடுகள், திட்ட மேலாண்மை, கொள்முதல், பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மலானஅனுபவத்தை கொண்டுள்ளாா். அவரது நிபுணத்துவம் எரிபொருள் சுழற்சி வசதிகளின் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாட்டிற்கு கொண்டு வருதல், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

பாதுகாப்புத் தேவைகளை உள்ளடக்கிய இரண்டாவது ஒருங்கிணைந்த மறுசுழற்சி ஆலையை வடிவமைப்பதற்காக பலதரப்பட்ட பொறியியல் குழுக்களை வழிநடத்தினாா். மேலும் பாதுகாப்பு உத்தியின் மதிப்பாய்வுகளில் பங்கேற்றாா்.

உயா்-கதிா்வீச்சு செயல்முறை அமைப்பை தூய்மைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் மற்றும் மின்உலை ே தாரிய பயன்படுத் தி எரிபொருள் மறுசுழற்சி வசதியை இயக்குதல் ஆகியவை முக்கிய பங்களிப்புகளாகும். அவரது பணிக்காக பல்வேறு விருதுகளையும்பெற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.