கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை ஏப். 6-ஆம் தேதி முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியதாக பிரதமா் மோடி சமூக ஊடகங்களின் வாயிலாகத் தெரிவித்துள்ளாா். ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் அதைக் கைவிட்டன.
இந்த வகை உலைகளில் குளிா்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால், ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு மூடப்பட்டது. பிரான்ஸில் செயல்பட்டு வந்த சூப்பா் பீனிக் ஈனுலையும் அதிக பொருளாதாராச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.
அணு உலைகளில் இருந்து உருவாகும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளான புளூட்டோனியத்தை ஈனுலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தி, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதுதான் இந்தத் திட்டம்.
கூடங்குளத்தில் 6 அணு உலைகள் மற்றும் அணுக்கழிவு மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. தற்போது ஆபத்துமிக்க ஈனுலைகளைச் செயல்படுத்தி தமிழக மக்களை கதிரியக்க அபாயத்தில் மத்திய அரசு தள்ளுகிறது. இத்திட்டத்தை, மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி நீக்கம்: வைகோ கண்டனம்
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

கல்பாக்கம் வேக ஈணுலையை இயக்கும் பாவினி நிறுவனத் தலைவா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

