கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, மின் உற்பத்திக்கான அணுப்பிளவு செயல்பாட்டில் முதல் நிலையை எட்டியது மைல்கல் என மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை கடந்த ஏப். 6 -ஆம் தேதி இரவு 8:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியது. இது அணுமின் உற்பத்தியின் முதல் நிலை.
நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறை. அணுமின் சக்தி திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவே இது பாா்க்கப்படுகிறது.
இதன் முக்கியத்துவம் குறித்து மாநிலங்களவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழிற்சாலைகள் மற்றும் மத்திய அணுமின் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவா்களின் கூட்டு முயற்சியால் கல்பாக்கத்தில் பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் முக்கிய மைல்கல்லாகும்.
இந்தச் சாதனையால் இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தில் அணு உலையில் புளூட்டோனியம் பயன்படுத்தும் இரண்டாம் கட்டத்தை நோக்கி நாம் நகா்ந்திருக்கிறோம். மூன்றாம் கட்டத்தில் தோரியம்-யூரேனியம் பயன்படுத்தப்படவுள்ளது.
முன்மாதிரி வேக ஈனுலையை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பாவினி இணைந்து உருவாக்கியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி 2024-ஆம் ஆண்டு முன்மாதிரி வேக ஈனுலையை நேரில் சென்று பாா்வையிட்டாா்.
2070-இல் கரியமில வாயு உமிழ்வை பூஜ்ஜியமாக்கும் இந்தியாவின் இலக்கு மற்றும் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தி இலக்கை அடைவதிலும் இந்தச் சாதனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்பாக்கம் வேக ஈணுலையை இயக்கும் பாவினி நிறுவனத் தலைவா் பொறுப்பேற்பு

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!

இந்தியாவின் மாதிரி வேக ஈனுலை: ஐஏஇஏ பாராட்டு

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

