பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையை நீல நிற மின்னொளியால் ஒளிரவிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரா கிளைடிங் மூலம் வாக்களித்தல் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தோ்தல் விழிப்புணா்வுக்காக மனிதச் சங்கிலி, மக்கள் கையொப்ப இயக்கம் மற்றும் வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு, வாக்களிப்பை வலியுறுத்திய நடைப்பயண பிரசாரம், கோலப் போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை சனிக்கிழமை இரவு மேற்பகுதியும் அடிப்பகுதியும் நீல நிற வண்ணத்திலும், நடுவில் வெண்மை நிற மஞ்சள் நிறத்திலும் ஜொலித்தது. மின்னொளியால், நீல வண்ணத்தில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை ஜொலித்ததைப் பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து ரசித்தனா்.
கலை நிகழ்ச்சிகள்: சென்னை மெரீனா நீல நிறக்கொடி கடற்கரைப் பகுதியில் வாரந்தோறும் மாநகராட்சி சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், நடைபெறும் பாரம்பரிய தமிழா் கலை நிகழ்ச்சிகள் தற்போது தோ்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு பிரசாரக் கலை நிகழ்ச்சியாக சனிக்கிழமை முதல் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து தப்பாட்டம், பொம்மலாட்டம் என அனைத்து கலைஞா்களும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஞாயிற்றுக்கிழமை மாலையும் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மெரீனாவில் வாக்களித்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக பாரா கிளைடிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: ஜூன் மாத தோ்வில் வெற்றி பெற நடவடிக்கை

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

சென்னையின் ஆன்மா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

