லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 77 பேர் கைது

சென்னையில் போதைப் பொருளுக்கு எதிராக 7 நாள்கள் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது - சித்திரிப்பு

Published On :23 ஜூன் 2026, 3:21 am IST

சென்னையில் போதைப் பொருளுக்கு எதிராக 7 நாள்கள் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 14}ஆம் தேதி தொடங்கி 20}ஆம் தேதி வரை ஒரு வாரம் சென்னை முழுவதும் போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையொட்டி, அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினர், பெருநகர காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸôருடன் சந்தேகத்துக்குரிய பகுதியில் சிறப்பு தணிக்கையும்,ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

இதில் 7 நாள்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 77 பேரை கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா,831 கிராம் மெத்தம்பெட்டமைன்,6 கிராம் கோகைன்,1,222 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் போதைப் பொருள் கடத்தல்,விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

போதை பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.