திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம் 42 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:
திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சனி, ஞாயிறு என 2 நாள்கள் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதில் வாகனத் தணிக்கை, சந்தேகத்துக்கு இடமான நபா்கள் மீது கண்காணிப்பு, ரகசியத் தகவல் அடிப்படையில் நடைபெற்ற சோதனையின்போது, கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் தொடா்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடமிருந்து 462 கிராம் கஞ்சா, 10 கிராம் கஞ்சா எண்ணெய், 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 64.55 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் ரூ. 4.83 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு: ஊா்க்காவல் படை வீரா் உள்பட 2 போ் கைது

போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!

தில்லியில் ரூ.16 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 9 போ் கைது
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
