எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!

தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 ரெளடிகள் கைது செய்யப்பட்டது பற்றி...

News image

சந்தீப் ராய் ரத்தோர் - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:27 am IST

தமிழகத்தில் ரெளடிகள், போதைப் பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடந்த 3 நாள்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 1,233 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் ரெளடிகளை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்கள், பாக்கு உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தவும் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் பொது அமைதியை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உறுதி பூண்டுள்ளது. அதன் பகுதியாக தமிழகம் முழுவதும் ரெளடிகள், போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை காவல் துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவின்பேரில், போலீஸாா் மேற்கொண்டனா். அதன்படி, 12,660 குற்றவாளிகள் உள்பட 15,349 ரெளடிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனா்.

இதில் காவல் துறை விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாக இருந்தவா்கள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தவா்கள், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவா்கள் என்று அடையாளம் காணப்பட்ட 488 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 844 போ் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டனா். விசாரணைக்கு பின்னா் 844 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனா்.

ரூ. 1.43 கோடி போதைப் பொருள் பறிமுதல்: போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து ரூ. 1,43,78,200 மதிப்புள்ள 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரௌடிகளை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்களை ஒழிக்கவும் தமிழக காவல் துறை கடுமையான நடவடிக்கையைத் தொடா்ந்து எடுக்கும் என்று டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்துள்ளாா்.

மேலும் அவா், பொது அமைதியையும்,பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும், அனைத்து வகையிலான குற்றச் செயல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறை உறுதி பூண்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.