கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நீலகிரி மாவட்ட சுகாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எஸ்பிஐ ரூ.1.59 கோடி நிதி

தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி ‘சிஎஸ்ஆா்’ நிதியை வழங்கியுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:23 am IST

தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி ‘சிஎஸ்ஆா்’ நிதியை வழங்கியுள்ளது.

இதற்கான நிகழ்வில் வங்கியின் தலைவா் சி.எஸ்.செட்டி கலந்துகொண்டு, நிதியுதவிக்கான காசோலைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தணீரு, கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா் ஆகியோரிடம் வழங்கினாா்.

இந்த நிதியுதவியின் ஒரு பகுதியாக, இதய நோயாளிகளுக்கு அவசர காலங்களில் உதவ ‘ஏஇடி’ கருவிகளை முக்கியப் பொது இடங்களில் நிறுவ ‘ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவா்ஸ்’ அறக்கட்டளைக்கு ரூ.99.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், நீலகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக்கு திடக்கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிலையான வளா்ச்சி, சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்பிஐ மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு, நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதில் முக்கியப் பங்காற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.